Clicky

அன்னை மடியில் 16 MAR 1968
இறைவன் அடியில் 13 MAY 2021
அமரர் பழனிவேல் கணேசன்
வயது 53
அமரர் பழனிவேல் கணேசன் 1968 - 2021 அனலைதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஐயா பழனி உன் துயர் செய்தி கேட்டு இடிந்து போய் விட்டோம்! ஐயன் உன்னை காப்பான் என்று நம்பி இருந்தோம்! ஏமாந்து போய் விம்மி வெடிக்கிறோம் ஐயா.. கொடிய காலம் வந்து இடையில் உன்னை கொண்டு போய்விட்டானே! சின்ன வயதில் அம்மா அக்கா என்று எல்லோருக்கும் செல்லம் பிள்ளை நீ துறு துருவென்று கல கலப்பாய் இருப்பாய்..... பொறுக்காத பொல்லாத விதி சொல்லாமல் வந்து விரைந்து போய் விட்டாய் ஐயா! தாங்க முடியவில்லை எங்கள் கண்ணுக்குள்ளும் நெஞ்சுகுள்ளும் நிறைந்து நிக்கிறாய் ஐயனே! ஓடோடி வந்து உன் முகம் பார்க்க முடியாத காலத்தில் கண்ணீரில் எம்மை கரைய விட்டு போனாயே ஐயனே! உன் பிரிவை எம்மால் தாங்க முடியாது எழுந்து வா மகனே! ஏன் இந்த சாபம் இறைவன் தந்தான் இந்த ஆண்டில் உன்னை இழந்து தவிக்கவா ஐயனே!உன் பிரிவால் தவித்து வாடுகின்றோம் உன்னை தேடுகின்றோம்... அன்னாரின் பிரிவால் வாடும் மனைவி பிள்ளைகள், கௌரி அக்கா குடும்பம், தேவி அக்கா குடும்பம் உற்றார் உறவினர் அனைவருக்கும் எமது ஆழ்த்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்... பாமா அம்மா குடும்பம் சிவா குகன் திலகம் உமா பத்மா குடும்பம் கனடா
Write Tribute