அமரர் யோகாம்பிகை இரத்தினசபாபதி
வயது 90
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஒரு தாயின் இழப்பு!
இழந்த மகவுகளுக்கே
அதன் வலி புரியும்!
ஆறுதல் சொல்ல பலரும் உண்டு
வார்த்தைகள் உண்டு
ஆனாலும்,
துயர் சுமந்த நேரம்
செவிபுலன்கள் கேட்பதில்லை!
கண்முன்னே நின்ற தெய்வம்
கண்மூடி தூங்கலாமோ!
புன்னகை மலர் சுமந்த
பூ வனம் வாடலாமோ!
தந்தையின் தங்கை என்றால்
உயிர் அணுக்கள் ஒன்றுதானே!
அதில் ஒன்று பிரிந்தாலும்
எம் உயிரும் உணரும்
வலி ஒன்று தானே!
நீண்ட ஒரு இடைவெளியில்
கோடு போட்டு பிரித்தாலும்
கண்டவுடன் மலர்ந்த முகம்
கண்முன்னே நிற்குது மாமி!
மாமி என்று அழைத்தவுடன்
உரிமையோடு அணைத்து
அருகோடு நின்று படம்
எடுத்துக்கொள் என்றதுவும்
நினைவுகள் அழியாது
நிலைத்திருக்க வேண்டும்
என்ற புரிதல் தானே!
மரணத்தின் தருணத்தில்
விழிகளுக்கு ஒளி உண்டு
வார்த்தைக்கு பொருள் உண்டு
உடல் மொழிகள் கூறும்
அசைவுகளில் தெளிவுண்டு
விடை பகிர்ந்த போதும்
கை அசைந்த போதும்
இறுதி விடை என்பது போல்
புன்னகை யோடு
வாசல் வரை வந்த கண்கள்
எம் உயிரோடு கலந்திருக்கும்
இது உறுதி! போய் வருக!
எம் தந்தையின் தங்கையே
மாமியே! போய் வருக!
உங்கள் பாத கமலங்களுக்கு
கண்ணீரின் முத்துக்களை
காணிக்கை ஆக்குகிறோம்
ஆத்மா சாந்தி அடைய
இறை வனை பிரார்த்திக்கிறோம்.
அன்னாரின் பிரிவுத்துயர் தாழாது
வாடி நிற்கும் குடும்ப உறவினர்
அனைவருக்கும்
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்கிறோம்
சாந்தி! சாந்தி! சாந்தி!
----சந்திரமோகன் அகல்யா குடும்பத்தினர்.
Write Tribute