யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil, Drancy ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகரட்ணம் பூமணி அவர்களின் நன்றி நவிலல்.
எம்மைப் பெற்றெடுத்த கண்கண்ட தெய்வமே!
அன்பின் பிறப்பிடமே! அருள்நிறைந்த இருப்பிடமே!
பாசத் திருவுருவே! பண்பதனின் பொக்கிஷமே!
நீங்கள் இருந்த இடமெல்லாம் நிர்மலமாகையிலே
நாமிருந்து வாடும் நாளதுவில் உங்களுக்கு
உங்கள் நினைவாக! நாம் உங்கள் நிழலாக
இந்தவொரு மலரதனை இன்முகமாய் ஆக்கி
இனிய பாத கமலங்களுக்கு காணிக்கையாக்கி
கண்ணீர்த்துளிகளை மலராக்கி வைத்து
அர்ச்சித்து வழிபடுகின்றோம். இன்றுபோல்
என்றுமே எமை ஆசீர்வதிக்க வேண்டும்
வானுலகு சென்றுவிட்ட எங்கள் வையத்து வாழ்ந்த
தெய்வமே! தேறிட வழி தாருங்கள்.
என்றும்
உங்கள் இனிய பாசநினைவுகளுடன்
மக்கள் - மருமக்கள் - பேரப்பிள்ளைகள்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.