திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோகராசா ஹேமச்சந்திரன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், யோகராசா புஸ்பதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
கோடீஸ், பாஸ்கரன், ஜமுனா, தர்ஷி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவர் 02-01-2006 திருகோணமலைக் கடற்கரை காந்தி சிலையடியில் பரிதாபமாகக் கொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஓருவர்!
ஆண்டு இருபது ஆனதுவோ
உங்கள் முகம் கண்டு
ஏற்க முடியவில்லை உங்கள் இழப்பை
எம் கண்களில் ஈரம்
நிரந்தரமானதோ என்னவோ……
பாதி வழிதனிலே
விதி வந்து பிரித்ததுவோ?
பரிதவித்து நிற்கின்றேன்
விரைந்தோடி வருவீர்களோ!
இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
பாவிகள் நாங்கள் உங்கள்
நினைவில் பரிதவித்து
நிற்கின்றோம் இன்று..
ஆறாத காயமாக நின் மாய மறைவு -எம்
மனதை மீளாத துயரத்துடன்
உறவுகள் நாம் உம்மை
எண்ணி ஏங்குகின்றோம்!!
யோகராஜா கேமச்சந்திரன்,
சண்முகநாதன் சஜேந்திரன்,
லோகித்தாஸ் றோகாந்த்,
மணோகரன் ரஜீஹர்,
தங்கத்துரை சிவானந்தா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!