
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோகராசா ஹேமச்சந்திரன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், யோகராசா புஸ்பதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
கோடீஸ், பாஸ்கரன், ஜமுனா, தர்ஷி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவர் 02-01-2006 திருகோணமலைக் கடற்கரை காந்தி சிலையடியில் பரிதாபமாகக் கொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஓருவர்!
எங்களின் அன்புச் செல்வமே!
உன் பிரிவு எங்களை வருத்திக்கொண்டு இருந்தாலும்
உன் நினைவுகள் ஒவ்வொரு நிமிடமும்
எங்கள் இதயத்தில் குடியிருக்கும்!
எது நல்லது எது கெட்டது என தெரியாத வயதில்
உன்னை தொலைதூரப் பயணத்திற்கு அனுப்பிவிட்டனர்
இரக்கம் இல்லாத பாவியர் கூட்டம்
உன் நல்ல குணத்தை அறியாத மனித கூட்டம்
எங்கள் அன்பு மகனே!
அவர்கள் உன்னுடைய இந்த
உலக பயணத்தை முடித்துவிட்டனர்
அது எமக்கு தெரியும் ஆனாலும் இந்த
உலகில் உன்னுடைய வாழ்க்கையையும் சேர்த்து
அவர்கள் சிறப்புடன் வாழ நாங்கள்
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
ஆறாக் கண்ணீருடன் அன்பு குடும்பத்தினர்..