1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் யோகராசா செந்தில்குமார்
1974 -
2022
சாவகச்சேரி, Sri Lanka
Sri Lanka
Tribute
28
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சாவகச்சேரி கற்குழி தபால் கந்தோர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், Liverpool ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோகராசா செந்தில்குமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என்னை நிர்க்கதியாய் பரிதவிக்க விட்டு
எங்கு சென்றீர்கள் காலங்கள் ஆயிரம்
போனாலும் மறக்க முடியுமா
உங்கள் நினைவுகளை!
காலம் எல்லாம் என்னை
வாழவைத்த கணவாளனே
காலன் அவன் பார்வையில் சென்றதேனோ
என்னை தவிக்க விட்டு?
எத்தனைதான் எமக்கு இருந்தாலும்
எம் உயிர் நீர் இல்லையே
ஏங்கித் தவிக்கின்றோம்!
மாறிவிடும் வாழ்க்கை
மறைந்து விடும் கனவுகள்
மறையாத உங்கள் நினைவுகள்
நாம் பார்க்கும் ஒவ்வொன்றும்
உங்கள் பெயராக உயிராக
எம்முள்ளே
என்றும் நீங்கா நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிராத்திக்கின்றோம்...
தகவல்:
ஷாமினி செந்தில்குமார்(மனைவி)