1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் யோகநாயகி அமரசிங்கம்
வயது 79

அமரர் யோகநாயகி அமரசிங்கம்
1944 -
2024
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகநாயகி அமரசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கடவுளாக கிடைத்த பொக்கிஷத்தை தொலைத்து
இன்றோடு பன்னிரு மாதம்!!!
அம்மா! நெஞ்சமெல்லாம் உங்கள் நினைவுகளை சுமந்தபடியே
எம் நாட்கள் மீளுகின்றது!
எங்கே அம்மா சென்றாய்
எங்களை எல்லாம் விட்டு விட்டு
எம்மை வாட்டும் இந்த சோகத்தை
தீர்த்து வைக்க வாருங்கள் அம்மா..!
ஆசையாய் நேசமாய் வளர்த்த பிள்ளைகளும்
பாசமாய் பண்புடன் வளர்த்த பேரப்பிள்ளைகளும்
உன்னை இழந்து தவிக்கின்றனர் தினந்தோறும்!
எங்களை தவிக்கவிட்டு
இமைகளை மூடி விட்டீர்கள்
எம்மையெல்லாம் அழவிட்டு
இறைவனை நாடிவிட்டீர்கள்
எத்தனை காலம் போனாலும்
எம் ஜீவன் உள்ள மட்டும்
உன் நினைவு மாறாது
உன் உறவுகள் மறக்காது
தகவல்:
குடும்பத்தினர்