யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், மல்லாவி, பிரான்ஸ் Clairoix Compiègne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகானந்தா சுப்பிரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எம் அன்புக்குரியவரின் இழப்பின் துயர் எம் உயிர் உள்ள வரை ஆறாதரணமாகும். எங்கள் கூட்டுக் குடும்பம்பத்தில் கூடு பிரிக்கப்பட்டு ஒரு குருவி பறந்து விட்டது. எங்கள் தோப்பில் ஆலமரத்தின் ஒரு கிளை ஒடிந்து விட்டது. எங்கள் வானிலே ஒளி வீசிய வட்ட நிலா மறைந்து விட்டது.உம் இழப்பை தாங்கமுடியாமல் கதறி துடிக்கின்றனர் மனைவி மக்கள் உறவினர்கள். எம் இதயத்தில் வெற்றிடத்தை நிரப்ப இனி யாராலும் முடியாது. நிலைகுலைந்து போனோம் உங்கள் பிரிவால் நித்தமும் உங்கள் நினைவுடனே நகரும் எம் மீதி நாட்கள்.
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லத்திற்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், அருட்தந்தையுடன் இணைந்து திருப்பலியில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும், பல்வேறு நாடுகளில் இருந்து மலர்ச் செண்டுகளை அனுப்பியும், தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும், திருப்பலியை எல்லா நாடுகளிலும் இருந்து நேரலை மூலம் பார்வையிட்டு மன்றாடிய அனைவருக்கும் ,மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அனைத்து அன்பான உறவினர்கள், நண்பர்கள் ,அனைவருக்கும், எமது குடும்பத்தினர் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.