Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 12 NOV 1951
மறைவு 13 JUL 2026
திருமதி யோகாம்பாள் வரதராஜா 1951 - 2026 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாக வும், புங்குடுதீவு, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகாம்பாள் வரதராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

 31 நாட்கள கடந்தாலும்
 உங்கள் அன்பு மட்டும் என்றும் குறையவில்லை அம்மா
உங்கள் அரவணைப்பும், பாசமான வார்த்தைகளும்
எங்கள் மனதில் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன

 எங்களை வாழ கற்றுத் தந்த உங்கள் அன்பு,
 எங்களை உயர வளர்த்த உங்கள் தியாகம்,
 என்றும் எங்கள் வாழ்வின் வழிகாட்டியாக இருக்கும்

 நீங்கள் எங்களுடன் இல்லாவிட்டாலும்,
 உங்கள் ஆசீர்வாதம் எங்களை என்றும் காக்கும்
 உங்கள் நினைவுகளோடு வாழ்வதே

 எங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது
 என்றும் அன்போடும், நன்றியோடும்
உங்களை நினைவுகூரும் குடும்பத்தினர்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute