யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகாம்பாள் வரதராஜா அவர்கள் 13-07-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராசரத்தினம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குமாரசாமி(புங்குடுதீவு 10ம் வட்டாரம்), கனகம்மா(புங்குடுதீவு 10ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வரதராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற வனிதா(சுவிஸ்), சுதர்சன்(சுவிஸ்), பிரதீபன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரிந்தா, சசிகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற புவனரட்ணம்(இத்தாலி), சபாரட்ணம்(பிரித்தானியா), அரசரட்ணம்(சுவிஸ்), மகேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஆனந்தன்(இலங்கை), காலஞ்சென்ற சந்திரன்(இலங்கை), கண்ணன்(ஜேர்மனி), காலஞ்சென்ற பரமலிங்கம்(இலங்கை), சீலன்(பிரித்தானியா), காலஞ்சென்ற இளங்கோ(சுவிஸ்), தர்மராஜா(சுவிஸ்), கைலைநாதன்(ஜேர்மனி), ராணி(இலங்கை), கிளி(ஜேர்மனி), தவம்(சுவிஸ்), நிர்மலா(இத்தாலி), செல்வி(சுவிஸ்), சரசு(இலங்கை), செல்லம்(இலங்கை), வனயா(ஜேர்மனி), ரூபி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சபிதா(துர்க்கா), சரண்(இலங்கை), சுவேன், கவிசன்(சுவிஸ்), அதீஸ், அப்சரா(சுவிஸ்), பிரகதி, மகர்ணா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்,
அன்னாரின் பூதவுடல் 16-07-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details