யாழ்ப்பாணம் பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kirchheim unter Teck ஐ வதிவிடமாகவும் கொண்ட செலஸ்டீன் யாட்லி பொன்னையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பண்பான உறவே! பாசத்தின் உறைவிடமே!
யாழில் பிறந்தீர் ஜேர்மனியில் வாழ்ந்தீர்
எல்லார் மனதிலும் அன்பென்னும் கயிற்றால் இணைத்தவரே!
குடும்பத்தின் குலவிளக்கே!
எங்கள் மனம் நிறைந்த பேருறவே!
ஒளிவீசும் உந்தன் திருவதனம் இப் பூவுலகைவிட்டு
திங்கள் ஒன்று கடந்தாலும்
உங்கள் நினைவால் விழிமூடி அழுகின்றோம்.
காலங்கள் கடந்தாலும்
நாம் வாழும் வரை உம் நினைவோடு வாழ்வோம்.
நீங்கள் நீண்ட துயில் செய்திடுங்கள் ஆண்டவர் அடிதனில்
உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்
ஓம் சாந்தி!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Rest In Peace, our thoughts are with you. May God guide you and your family with strength, peace and comfort during this difficult time.