யாழ்ப்பாணம் பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kirchheim unter Teck ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செலஸ்டீன் யாட்லி பொன்னையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்புமுகம் எம் நெஞ்சை விட்டு
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே!
எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!
ஓராண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும்
காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லை அப்பா!
உங்கள் ஆத்மா அமைதி பெற
கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.
Rest In Peace, our thoughts are with you. May God guide you and your family with strength, peace and comfort during this difficult time.