


கண்ணீர் அஞ்சலி கொல்லன்கலட்டி வீதி, பன்னாலை ,தெல்லிப்பழையை சேர்ந்த எம் சகோதரர் குணாளன் (ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்) மறைவால்,மனத்தில் நிறைந்த துயரை; உறவுகள்,நண்பர்களுடன் இணைந்து பகிர்ந்து கொள்கிறோம். உப தபாற்கந்தோரோடு ஒட்டிய பெருவளவில், எம் சந்ததி வழி வந்த பரம்பரை நிலத்தை ,விட்டு என்றும் நீங்காது நிலைத்தவரே! இன்று ஏன் அகன்றீர்? ஒரு கூரை வாழ்வாக, ஒரே பானை சமையல் உண்டு ஓடி ஆடி வலம்வந்தோம். ஒன்றாய் வளர்ந்தோம்.எண்ண மனம் இனிக்கிறது.என்ன!நினைவிருக்கா?அப்பா தெ.மு.செ.வைத்தீஸ்வரன் 1953இல்,காலமாக, பேரனார் தம்பு வாத்தியார் 1959 இல் பின் தொடர, கனகம்மா எங்கள் அம்மா கைப்பக்குவத்தில்,அறுசுவை உணவு உண்டு, அம்மம்மா அன்னலட்சுமி அறிவுக்கூறி வழி நடத்த, சித்தி ரோகினி ரீச்சர் செல்ல ஆதரவில் சித்தப்பா இரத்தினவேல் பிரதம லிகிதர் ,மேலதிக அரசாங்அதிபர் என்று பெருமை தர, எம் நாற்சார் வீட்டு நடு முற்ற மல்லிகை பந்தல் மணம் பரப்ப ,கூடி வாழ்ந்து குதூகலித்தோம் நினைவிருக்கா?பக்க வீடுகளான இரத்தின மாமி ,பாப்பா மாமி ,பூமா சித்தி வீடுகளுக்கு வேலி கடவை வைத்து பண்டம்,கறி பரிமாறி ஒன்றி வாழ்ந்தோமே!உமக்கு நினைவிருக்கா? மகாஜனாக்கல்லூரி மாதாவுக்கு ஸ்தாபகர் துரையப்பா பிள்ளை முதல் அதிபர் தெ.து ஜயரத்தினம்வரைஒத்துழைத்து ,கனிட்ட அதிபர்கள் ஆசிரியர் என கடமை ஆற்றிய தம்பு உபாத்தியார்,ரோகிணி ரீச்சர் வழியில் பொதுப்பணியையும் ,தந்தை வழியில் தமிழரசுக்கட்சி பணியையும் ஊரில் தொடர்ந்து ஊர் ,தொண்டன் என்று போற்ற பெருமை தந்தீர்.மனைவி கமலேஸ்வரி,ஏக மகன் டிலீப் அமிர்தன் (உதயன் ,இணைச் செய்தி ஆசிரியர்)மருமகள் நிலஜா (தாதி,தேசிய வைத்தியசாலைகொழும்பு)ஆகியோர் துயரில் ,நிலை இங்கேயும் நினைப்பு உங்கேயுமாக வாழம் நாமும் இணைகிறோம். ஆத்ம சாந்திக்கு அஞ்சலிகள். இரஞ்சன்(ஓய்வு நிலை நில அளவையாளர் )கனடா தயாளன் (முன்னாள் நகரபிதா கிங்ஸ்டன் லண்டன்), ப.வை.ஜெயபாலன்,கிளிநொச்சி(லண்டன்) Drஇராஜ கவுரி (அவுஸ்ரேலியா)இராஜவேல் (அவுஸ்ரேலியா)இராஜயோகன்(லண்டன்)

Thayalan, I am so sorry to hear the sad news. Please accept our deepest sympathies. May God grant you and the entire family comfort at this difficult time. May his soul rest in perfect peace