யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sens ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வில்பிறட் விஜித்தா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்து ஆனதம்மா
ஆழாத்துயர் எம் இதயத் துடிப்பில்
என்னுமே கேட்குதம்மா
பன்னிரண்டு மாதங்கள் பரிவோடு எமைச்சுமந்து
பாராட்டிச் சீராட்டி எமை வளர்த்த தாயே
உங்களை நாம் இனி
எங்கே காண்போம் அம்மா
நினைவு வருகையில் நிலை குலைந்து போகின்றோம்
எம் இனிய செல்வமே
காலன் உன்னையும் பறித்தானே
எம் குரல் கேட்கிறதா விஜி
கண்முன்னே நீ வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உன்முகம்
எந்நாளும் உயிர் வாழும்
எமையெல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்ட எம் பாச குலவிழக்கே
உன் ஆன்மா சாந்தியடை
எல்லாம்
வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்.
அன்னாரின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி 08-09-2021 புதன்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் Belleville ஒப்புரவு அன்னை சிற்றாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.