3ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                    
                    Tribute
                    1
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sens ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வில்பிறட் விஜித்தா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மரியன்னை பிறந்த சிறப்புத் திருநாளில்
விண்ணுலகம் உன்னை அழைத்ததேனோ!
அன்பின் உருவாகவும்
பாசத்தின் உறைவிடமாகவும்
கொண்ட என் அருமை மகளே....
மாதங்களென்ன வருடங்களென்ன சென்றாலும்
உன்நினைவு மறையவில்லை
உன்னரிய புன்சிரிப்பை
இனி எப்போது நாம் காண்போம்
பதை பதைத்து நாம் நிற்க
நீ பறந்தோடி மறைந்ததென்ன
சொரியும் விழி நீர் துடைக்க
வந்திடுவாய் என்மகளே....
என்றும் கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களாய் அர்ச்சித்து
உன் ஆன்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.!!!
இவரின் பிரிவால் துயருறும் பிள்ளைகள், அப்பா, அம்மா, அண்ணா,
அண்ணி, அக்கா, மச்சான், உற்றார், உறவினர்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                         
                     
        