

யாழ். சண்டிலிப்பாய் ஆலங்குளாயைப் பிறப்பிடமாகவும், தற்போது ஜேர்மனி Dortmund ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயராஜா கெளரீஸ்வரன் அவர்கள் 10-06-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஜயராஜா செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிறீதயாரூபி அவர்களின் அன்புக் கணவரும்,
நர்மதா, பிருந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிவேந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,
தரண்யா, கார்த்திகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
லிங்கேஸ்வரன்(இலங்கை), நந்தேஸ்வரி(இலங்கை), லோகேஸ்வரி(இலங்கை), திலகேஸ்வரி(பிரான்ஸ்), சிறீஸ்வரி(கனடா), ஞானேஸ்வரன்(கனடா), கெங்கேஸ்வரன்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெகதாம்பாள்(இலங்கை), காலஞ்சென்ற இராஜகோபால், நவரட்னராஜா(இலங்கை), வசந்தராஜன்(பிரான்ஸ்), சக்கராயுதன்(கனடா), வனிதா(கனடா), வசந்தி(இங்கிலாந்து), ஞானரூபி(இலங்கை), கலைரூபி(இலங்கை), மயூரன்(ஐக்கிய அமெரிக்கா), இரதிரூபி(கனடா), வதனரூபி(இங்கிலாந்து), காலஞ்சென்ற இராமேஸ்வரன், பவானிரூபி(நெதர்லாந்து), சடாச்சரன்(சுவிஸ்), சிறீதரன்(இங்கிலாந்து), பாஸ்கரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மோகனச்சந்திரன்(இலங்கை), செல்வராசா(இலங்கை), பத்மினி(ஐக்கிய அமெரிக்கா), சாந்தகுமார்(கனடா), பிரான்ஸ்(நெதர்லாந்து), ஆனந்தி(சுவிஸ்), தாமரா(இங்கிலாந்து), கோமதி(சுவிஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய கொரோனா கிரிமித்தொற்றுக்கான சமூகநடைமுறைகளைப் பின்பற்றும் முறையில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் 25 பேர் மட்டும் மண்டபத்தில் இறுதிக்கிரிகைகள் செய்வதற்கான அனுமதி தந்துள்ளார்கள். உறவினர்கள், நண்பர்கள் பின்வரும் எண்கள் மூலம் தொடர்பு கொண்டு, தங்கள் அனுதாபங்களைப் பகிர்ந்து விபரங்களை அறிந்து செயற்படும்படி மிகவும் மனம்வருந்தி அறியத்தருகின்றோம்.