1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விக்கினேஸ்வரன் அப்புத்துரை
வயது 70

அமரர் விக்கினேஸ்வரன் அப்புத்துரை
1950 -
2020
தெல்லிப்பழை வீமன்காமம், Sri Lanka
Sri Lanka
Tribute
57
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Kalundborg ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த விக்கினேஸ்வரன் அப்புத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:-28-05-2021
ஓராண்டு ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும்
துடிக்கின்றது எம் இதயம்
உங்கள் இனிய புன்னகை மீண்டும்
ஒருமுறை காண்போமா...
பாதையோர மரங்களின் நிழலைப்போல
உமது பாசம் நிறைந்த செயல்கள்
எமது ஞாபகங்களில் எப்போதுமே நிலைத்திருக்கும்..!!
பிரிவு என்பது ஒருவரை மறப்பதற்கு அல்ல
அவர்களை அதிகமாக நினைப்பதற்கே
என்பதை உணர்த்திவிட்டீர்கள்!
இந்த மண்ணைவிட்டு உங்கள்
உடல் மட்டும் தான் சென்றதப்பா - உங்கள்
ஆத்மா என்றென்றும் எங்களுடன்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவு தினம் 28-05-2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
தகவல்:
குடும்பத்தினர்