யாழ். கொக்குவில் தாவடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த வைஷகி சயந்தராஜன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
எத்தனை கவிதை எழுதினாலும்
முடியவில்லை
எம் கனவில் கலந்த உன்
எல்லையற்ற நினைவுகள்
நிற்கின்றன நிழலாக
அம்மா! உன்னை இழந்து
காலங்கள் கடந்தாலும்
ஆண்டுகள் சென்றாலும்
எங்கள் மனதில் என்றும்
நிலைத்திருப்பாய்!
அன்பின் அடையாளமாக
அறத்தின் புதல்வியாக
உந்தன் அன்பு முகமும்
நேசப் புன்னகையும்
கடவுளுக்குப் பிடித்ததோ!
உன்னை அவசரமாக
அழைத்து விட்டார்
நொடிப் பொழுதில் எமை
வருந்த விட்டுச் சென்று விட்டீர்!
நாம் இந்த மண்ணில் வாழும் வரை
நம் இதயத்தோட்டத்தில் வைஷகி
என்னும் ரோஜாப் பூ ஓயாது
பூத்துக் கொண்டிருக்கும்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 13-12-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று பின்னர் 15-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் வீட்டுக்கிருத்தியக்கிரியை அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராய் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.