திதி: 24-08-2026
யாழ். புங்குடுதீவு தட்டயம்புலம்பதி 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், தற்போது கனடா Ajax ஐ வாழ்விடமாகவும் கொண்டிருந்த வே.க.சோமசுந்தரம் சின்னத்தங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அஞ்சலியும் வணக்கமும்
செந்தமிழ் மொழியின் சீர் மிகு பற்றாளன்-சோம
சுந்தரத் திலகத்தின் சுடர்மிகு ஒளி இவள்.
தமிழ் நெஞ்சங்கள் வாழ்ந்திடும்
நிரந்தரத் தாயவள்!
எண்ணற்ற மனங்களை வென்ற தாய்!
எழில் கொண்ட எம் ஊரின் மூத்த தாய்!
பண்புக்கும் அன்புக்கும் உரிய தாய்
பாரினை விட்டு நீ சென்றதேன்?
கனிவான பேச்சு...
கண்ணியம் குறையாத நேர்த்தி,
இனிவான விருந்தோம்பல்...
இனி இங்கு இல்லை என எண்ண
எம் மனம் மறுக்கிறது!
அம்மா!
நேர்மைக்கும், நெறிக்கும்
நேராக நின்றவள்!
நெறி கொண்ட தமிழ் வென்ற
கணவன் தோளோடு
துணை நின்றவள்.
நிழலாக களம் சென்றவள்!
கடமைகள் இனிதே முடித்த தாய்!
கண்ணியம் நெறி நின்று வாழ்ந்த தாய்!
உறவுகள் சுற்றம் போற்றிட
ஊருக்காய் உண்மையாய் உழைத்த தாய்!
அருமைப் பிள்ளைகளைப் பெற்ற தாய்.
அறம் வழி வாழ்ந்து நின்ற தாய் !
இறைவன் வழி தேடி சென்றிட்டாய்!
இருக்கும் உன் நாமம் எங்கள் மனங்களில்!!
நினைவினில், நெஞ்சினில் என்றுமே
நீங்காத நினைவாகி இருப்பாய் அம்மா!
அன்னையே! உன் ஆத்மா
சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்...
அமரர் சோமசுந்தரம் சின்னத்தங்கம் அவர்களின் துயரச்செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் பிள்ளைகள் உற்றார்...