யாழ். புங்குடுதீவு தட்டயம்புலம்பதி 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், தற்போது கனடா Ajax ஐ வாழ்விடமாகவும் கொண்ட வே.க.சோமசுந்தரம் சின்னத்தங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் உணர்வும் உயிருமான அன்னையே
தேசப்பற்றும் இனப்பற்றும் காந்
தீயப்பற்றும் கொண்டவரை
அரும்பெரும் துணைவராய் பெற்ற மாமியே
அம்மா நீங்கள்பாலோடு ஊட்டிய தேசபக்திக்கு
இனப்பற்றுக்கு சுதந்திர தாகத்திற்கு
தலைவணங்குகின்றோம்
இனியாரிடம் பெறுவோம் அம்மா
உங்கள் வயிற்றில் வந்து உதித்ததில் பெருமை கொள்கின்றோம்
புகழால் எமக்கு புகழ்சேர்த்து மறைந்த
தமிழரசு தாய்
க்கு இதயம் நிறைந்த
நன்றிகள் சமர்ப்பணம்
நன்றிக்குரியவர்களை நினைந்து கொள்வோம்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் ஒருவராகிவிட்ட எங்கள் குடும்பத்தலைவி திருமதி வே.க. சோமசுந்தரம் சின்னத்தங்கம் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு உடன் எங்கள் இல்லங்களுக்கு வருகைதந்து ஆறுதல் கூறியும் அன்னையின் புகழுடம்பு அஞ்சலிக்கு வைக்கப்பட்ட இருதினங்களும் மண்டபம் நிறைந்து வருகை தந்தும் கொழும்பு சுவிஸ்நோர்வே லண்டன் பிரான்ஸ் ஆகிய தேசங்களில் இருந்து நேரில் வந்து இறுதி ஊர்வலத்தில் பங்கு கொண்டு அஞ்சலி செலுத்தியவர்கள் கனடா மற்றும் உலகின் பலநாடுகளில் இருந்தும் மலர் வளையங்கள் வைத்தும் மலர்மாலைகள் சாத்தியும் கண்ணீர் அஞ்சலி பிரசுரங்கள் வெளியிட்டும் அஞ் சலி உரை நிகழ்த்தியவர்களுக்கும் தொலைபேசி முகநூல் ஊடாக அனுதாபங்கள் கூறியவர்கள் பூமாலைகள் அனுப்பிவைத்தும் அந்தியேட்டி சபீண்டீகரண நிகழ்வுகளை சிறப்புற செய்த எங்கள் பூமியின் அந்தண பெருமக்கள் அன்னை மருத்துவமனையில் இருந்தநாட் தொடக்கம் இன்றுவரை பல்வேறுவகையான உணவு ஆகாரங்கள் தேனீர் குளிர்பானங்கள்தந் தும் பல்வேறு வகையில் உடன் இருந்து உதவி ஒத்தாசைகள் வழங்கிய அனைத்து அன்பு இதயங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்!
அன்னையின் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்!
அமரர் சோமசுந்தரம் சின்னத்தங்கம் அவர்களின் துயரச்செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் பிள்ளைகள் உற்றார்...