அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்த எங்கள் சித்தப்பா! ஏனோ இறைவன் இடை நடுவில் பறித்து விட்டான்.. பண்புள்ளோரை பல காலம் வாழவிடக் கூடாதென்றோ? என் செய்வோம் இறைவன் சித்தம் இது இனி காணமுடியாத சோகநிலையோடு இங்கிருந்தே ஏங்கியழுகிறோம் எங்கள் சித்தப்பாவே! எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள் எம்மோடு! காலமெல்லாம் உம் உறவு நினைத்துருக எமைவிட்டு சென்றதேனோ? - நாமோ!! இன்று பண்பின் பெருந்தகையாகவும் பாசத்தின் உறைவிடமாகவும் எம்மத்தியில் அன்பு ஒளியாக இருந்த எங்கள் சித்தப்பாவே!! மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும் உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை. நல்லவர் பெயர் விளங்கும் அவனியிலே அன்பான உங்கள் பெயரும் விளங்கும்!! கல்மனம் படைத்த காலனவன் கவர்ந்தானோ உம் உயிரை ஆண்டவா ஏன்தான் பறித்தாயோ!! அன்பைத்தான் முறித்தாயோ!! அமைதியாக துயிலும் எங்கள் சித்தப்பாவின் ஆன்மா இறைபதம் சேர இறைவனை இறைஞ்சுகிறோம்!! ஓம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!!
உங்கள் குடும்பத்துக்கு ஏற்பட்ட துயரில் நாமும் பங்கு கொண்டு அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அன்னாரது குடும்பத்துக்கு...