Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 JAN 1954
இறப்பு 13 FEB 2021
அமரர் விஸ்வநாதன் விஸ்வகுமார் (குமார்)
தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் பழைய மாணவர், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய இந்து இளைஞர் சபை உறுப்பினர்
வயது 67
அமரர் விஸ்வநாதன் விஸ்வகுமார் 1954 - 2021 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 32 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். தெல்லிப்பழை கம்பனையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஸ்வநாதன் விஸ்வகுமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 18-02-2026

ஆண்டு ஐந்து கடந்தாலும் உங்கள் 
அன்பொழுகும் தங்க முகம் 
மறந்தோமில்லை இன்றும் உங்கள்
 பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!

அன்று ஆனந்த மழையில் நனையவைத்த 
எங்களை இன்று கண்ணீர் மழையில் 
நனைய வைத்ததேனோ அப்பா!

ஒளி விளக்காய் இருந்ததெங்கள் 
குடும்பமின்று இருள் சூழ்ந்து 
கொண்டதேனோ அப்பா!

அன்போடு அணைத்து எம்மை
 ஆசையுடன் முத்தமிட்டு ஆசைப்பட்ட 
அனைத்தையும் வேண்டி தரும் எம்
 அருமை அப்பாவை காண்பதெப்போ!

இறப்பு அனைவருக்கும் நியதி
 என்றாலும் உங்களை மனம் ஏனோ 
ஏற்க மறுக்கிறது மறுபடியும் 
காணத்துடிக்கிறது அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய 
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 21 Feb, 2021