யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, மலேசியா Kajang, பிரித்தானியா London, Birmingham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வநாதன் விக்னேஷ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அன்பு உறவே அப்பா!
எங்கு தேடுவோம் உமை அப்பா!
கண்ணைக் காக்கும் இமை போல
எம்மைக் காத்த எம் அப்பா!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் அப்பா!
தினம் ஒரு சந்தோசம் தந்தீர்கள்
இன்று தினம் தினமாய் உங்களுக்காய்
அழுகின்றோம் அப்பா...
வருடங்கள் ஒன்றானாலும் ஆறாது
உங்கள் பிரிவின் துயரம்
தீராது எங்கள் சோகம்
உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இன்றும் எங்கள் விழிகளில்
வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
என் அம்மாவின் அன்பு தம்பி, எங்கள் அருமை மாமா... என் தாய் வீட்டு உறவில் உண்மையான ஒரு உறவைப் பிரிந்தோம் இனி என்று காண்போம் உங்களை. மாமா என்பேனோ மாமனிதன் என்பேனோ அம்மா என்றதும் நினைவுக்கு வரும் உடன்...