
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி யோகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஷ்வநாதன் ஜெகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவோடு....
அற்புதம் நிறைந்த புனித உயிர்ப்பு
அகிலத்தில் உயர்ந்த மனிதப் பிறப்பு
நற்பணிகளோடு நாளெல்லாம் சிறக்கையில்
நம்பமுடியாத துன்பங்கள் சூழ்ந்ததேனோ
கற்ற கல்வியோடு கனிந்திட்ட சேவைகள்
களைத்து ஓய்ந்ததா காலனின் பிடியிலே
தற்பரன் நிழலில் நீள்துயில் கொள்வதற்காய்
தரனியில் எமை தவிக்கவிட்டுச் சென்றதேனோ
மற்றவர்க்கு உதவும் மகத்தான அன்பு உள்ளத்தை
மண்ணில் நாம் வாழும்வரை மறப்போமா தெய்வமே!
பார்போற்றும் பண்புகொஞ்சும் சிறப்புமிகு நெடுந்தீவில்
மணியகாரன் பேரன் பரம்பரையில் அவதரித்து
நேர்நின்ற பாதையில் நிறைவான நிமிர்வுடன்
நிலையான தனித்துவத்தில் தனக்கென இடம்பிடித்து
வேர்தாங்கும் பெருமையோடு செந்தமிழ் நிறைந்தினிக்க
வேண்டும் இறையருள் பக்தியில் மனம்பதித்து
ஊர்போற்றும் உறவாகி உதவும் கரம் நிறைத்து
உயர்ந்திட்ட மகத்துவத்தின் பெருமையில் சிறந்தவரே!
விழியோரம் வழியும் கண்ணீர்த் துளிகளுடன்
உள்ளத்தையும் மௌனமாக்கி உங்கள் ஆத்மா
சாந்தியடைய இறையடி பணிந்து வணங்குகின்றோம்!
அன்பாகக் கதைபேசி அகமகிழும் பண்பும்
அழகுச் சிரிப்போடு அர்த்தங்கள் பல நிறைத்து
அமுதத் தமிழின் ஆற்றல்மிகு எழுத்தாளராய்
அருமையுடன் பல்துறைகளிற் சிறந்தவரே
அனைத்தையும் மறந்து ஆண்டவன் பணிக்காய்
அவனியில் எமைவிட்டு அவன்தாழ் சென்றதேனோ!
அகிலத்தில் நாம் வாழும் காலமெலாம்
அன்பான உங்கள் நினைவுகளைச் சுமந்தவாறு.......
உங்கள் ஆத்மா எல்லாம்வல்ல எம்பெருமான்
திருவடியில் இளைப்பாற வேண்டுகின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம்சாந்தி!!!
எங்கள் குடும்ப சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.தங்கள் ஆத்ம சாந்திக்கும் எம் இறைவனாம் ஐயனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!...