11ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                    
                    Tribute
                    2
                    people tributed
                
            
            
                அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        திதி: 30-06-2021
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஸ்வலிங்கம் விமலராசா அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
பதினொரு வருடம் இன்று
பாரிலே மறைந்து செல்ல
விதியினை ஏற்றுக்கொண்டு
விம்மியே வாடும் நெஞ்சம்!!
கதியிலா இடமாய் நாங்கள்
கலங்கிய உள்ளத்தொடு
பொதியினைத் தலையில் தாங்கிப்
புவிதனில் நகரும் வாழ்வே!
தந்தையை இழந்து வாடித்
தவித்திடும் உன்றன் மக்கள்
விந்தையாய்ப் பிரிந்து போன
விதியினை யென்ன வென்போம்!
செந்தணல் மேலே நாங்கள்
சிதைந்தன வலியில் மீண்டும்!
சொந்தமே இல்லா மாயம்
துணிவினைத் தந்தே காப்பாய்!
நித்தமும் உங்கள் எண்ணம்
நிறைகுடம் போல நிற்க
நித்திரை இன்றி வாடி
நிற்கதி அற்று நின்றோம்!
முத்திரை போல உங்கள்
முழுமதி முகத்தை யெண்ணி
எத்தனை காலம் இந்த
ஏக்கமே தாங்கி நிற்போம்!
உங்கள் ஆத்மா சாந்திக்கு
பிராத்திக்கின்றோம்  
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                         
                     
        