யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஸ்வலிங்கம் விமலராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
இதயத் துடிப்பினிலே ஈரைந்து பத்தாண்டுகளோட
இன்னல்கள் சூழ்ந்து இரும்பான மனங்களோடு
புதயல் பொக்கிஷமாய் புதைத்துவைத்த எண்ணங்கள்
புலம்பித் தவிக்கின்றோம் புலராத பொழுதினிலே
மக்கள் நலனிலே மகிழ்வித்த மாமனிதர்
மகத்துவம்தான் கண்டார்கள் மரண வீட்டினிலே
அக்கம்பக்கம் அனைவரையும் அன்புடனே அரவணைக்க
அன்றுமுதல் இன்றுவரை அகத்திரையில் காண்கின்றோம்
விட்டகலா சொந்தங்கள் வேதனையில் தான் துடிக்க
விடைபெற்றுப் போனதென்னே விம்மியழுது துடிக்கின்றோம்
தொட்டுக்கட்டிய தாலியிலே தோன்றியது கைரேகை
தோள்கொடுக்க யாருமில்லை துவண்டுபோகும் நேரமெல்லாம்
சொத்தாக விட்டுச்சென்ற செல்வங்களிரண்டும் கண்ணீரில்தான்
சொர்க்கத்தில் சென்றிருந்து சோதனைகளைப் பாருமப்பா
முத்தாக எழுதுகிறேன் முழுச்சொத்தும் போனதப்பா
முகவரியைத் தேடுகிறோம் முழுமதியும் மறைந்ததப்பா
அப்பாவென்று தானழைக்க ஆறாத வடுவுமப்பா
அடுத்தடுத்து எம்துயரும் அலைஅலையாய் மோதுதப்பா
எப்படி நாமெழுவோம் ஏக்கங்கள் தீராதப்பா
எண்ணிலா கனவுகள் எங்கள் நெஞ்சக்கூட்டினிலே
உன்னதமாய் நாம் வாழ உதிரத்தைப் பிழிந்துதந்து
உள்ளங்களிலே நீங்காதிருக்க உத்தமராய் வாழ்ந்தீர்களே
கன்னக்குழி சிரிப்பும் காலங்கள் கடந்தாலும்
கனவிலே வந்ததப்பா காலமெல்லாம் வாடுகின்றோம்
உங்கள் சாந்திக்கு என்றென்றும் பிரார்த்திக்கின்றோம்