1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் விஸ்வலிங்கம் இராசபூபதி
வயது 74
அமரர் விஸ்வலிங்கம் இராசபூபதி
1950 -
2025
சாவகச்சேரி வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சாவகச்சேரி வடக்கைப் பிறப்பிடமாகவும், மந்துவில் கிழக்கு கொடிகாமம் வேம்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் இராசபூபதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:14-02-2026
பாசமிகு நிழல் பரப்பி
எங்கள் ஏற்றமிகு வாழ்விற்கு
மெழுகுவர்த்தியாய் தனையுருக்கி
ஒளி பரப்பிய எங்கள் தாயே!
ஓராண்டு போனதே
காணவில்லையே எம் கடவுளை
எங்கள் தெய்வம் நீதானே அம்மா
கனவிலே வந்து கதைகள் பல சொல்கிறீரே
நேரில் வந்து சொல்லீரோ
காவியமாய் வாழ்ந்தீர்கள்
உம்மை காலமெல்லாம்
நினைத்திருப்போம்
பாசத்தோடும் பண்போடும் எமை
பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும் எம் சந்ததிக்கு
ஒளி விளக்காய் ஒளி தந்து
வழி நடத்துங்கள் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்