![](https://cdn.lankasririp.com/memorial/notice/224701/4b1f754a-34f2-47be-8149-9a1cf469711b/24-65c5dab8d7072.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/224701/8a53f6b3-6b64-4dc0-8c8f-57bf9322e544/24-65c5dab8908b2-md.webp)
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரம் வல்லனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St Gallen Gossau ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த விஸ்வலிங்கம் மதியாபரணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு கண்ணீர் அஞ்சலி
ஆண்டு ஒன்று கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் - அப்பா
கண்ணின் மணி போல் எம்மை
காத்த அன்புத் தெய்வமே - அப்பா
ஆறிடுமோ எங்கள் துயரம்..
.பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்ப முடியாமல் நாங்கள்
இங்கு தவிக்கின்றோம்
முதலாவது ஆண்டு நினைவு நாள் வந்ததோ
எங்கள் தந்தையே ஒவ்வொரு நிமிடமும்
உங்கள் நினைவு தான் - அப்பா
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா
என அழைப்பதற்கு நீங்கள் இல்லையே - அப்பா
காலங்கள் விடை பெறலாம் ஆனாலும்
கண்முன்னே நிழலாகும் உங்கள்
நினைவுகள் நித்தமும் எங்களுடன்
உயிர் வாழும் - அப்பா.
நீங்கள் வழிகாட்டிய பிள்ளைகள்
அப்பா நினைவில் பிரதிகளைப்
பார்த்து எப்போதும் கதைத்துக்
கொண்டே இருப்பார்கள் எவரும்
காட்டாத அளவு அக்கறை, அன்பு, வைத்தீர்கள்.
எங்கு போனீர்கள், எப்போது வருவீர்கள்
என்று வழி பார்த்து ஏங்குகின்றார்கள்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!