பார் போற்ற விஸ்வா பவனி வருவாய் என பாத்திருந்தோம் மைந்தா, பதுமையான விஸ்வா, பத்திரமாய் வீடு வர காத்திருந்தோம் விஸ்வா, காரில் வந்த காலன் உனை கவர்ந்து போனதேனோ ? குண்டுக்கண்ணும் குழி விழும் உன் சிரிப்பும் நெஞ்செலாம் நிறைந்து நிழலாடுதடா . உன் குறும்பெல்லாம் மனதில் குறும்படம் காட்டுதடா. இறைவா அவனை அணைத்துக்கொள்ளும், பிறவாத பெரு வாழ்வு தந்து பாத்துக்கொள்ளும் என மன்றாடுகிறோம். விஸ்வா, மீண்டும் நீ மலர்வதானால் மகிழ்வாய் வாடா மகாலிங்கம் குடும்பத்துள் வழி நெடுக விழி வைத்து காத்திருப்போம் காலமெலாம் உனக்காய் , எம் மைந்தா, நம் விஸ்வா. அன்புளார் என்பும் உடையர் பிறர்க்கு. ஓம் சாந்தி. உன் பிரிவால் துயர் தோய்ந்து நிற்கும்- அப்பம்மா, சிவம் பெரியப்பா, மோகன் பெரியப்பா குடும்பங்கள்.