1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 JUL 1936
இறப்பு 17 JUN 2020
அமரர் விசுவாசம்மாள் கனகமணி நவரெட்ணம்
வயது 83
அமரர் விசுவாசம்மாள் கனகமணி நவரெட்ணம் 1936 - 2020 India India
Tribute 27 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

இந்தியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா  Etobicoke ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த
விசுவாசம்மாள் கனகமணி நவரெட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஆண்டொன்று ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின் தாய்மடியைத் தருமா?

கருவரைக்குள்ளிருந்து நாம்
காலுதைத்த போது...
விருப்புற்று எம்பாதத்தை முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!

இரவெல்லாம் நிலவாக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா…

எங்களை எல்லாம் கண்ணீர் கடலில் மூழ்க
விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா?
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அம்மா உங்கள் அன்பிற்கு ஈடாகுமா?

இறப்பு என்பது நியதி என்று
எம் மனம் சொல்கிறது
ஆனால் உள்ளம் ஏற்க மறுக்கிறதே!
இறைவன் காலடியில் என்றென்றும் வாழ்ந்திடம்மா
உன் நேசம் மறவாது நிழலாக நாமிருப்போம்...

உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்..

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos