

யாழ். கரம்பொன் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விசுவலிங்கம் விஜயலெட்சுமி அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பார்வையிலிருந்து
நீங்கள் மறைந்து ஒன்பது ஆனதுவே
நம்ப மறுக்கின்றதம்மா விழிகள்
நீங்கள் இல்லாத இந்த உலகத்தில்
இப்போது நாம் வாழும் ஒவ்வொரு நிமிடமும்
ஒளியற்ற விழிகளோடு வாழ்கிறோம்
உணர்வற்ற உடலோடு
நடமாடும் நடைப்பிணமானோம்
ஒவ்வொரு கணப்பொழுதும்
உயிர் எம்மைப் பிரிவதாய் உணர்கிறோம்
எத்தனை நாளானாலும் உங்கள்
நினைவுகள் எப்படி எம்மை விட்டு நீங்கும்?
எங்கள் நெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும்
அம்மா நீங்கள் எங்களுடன் வாழ்ந்த நாட்களும்
நினைவுகளும் நிலையானவை
நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை
உங்கள் நினைவுகள்
எத்தனை வருடங்கள் சென்றாலும்
எம் இதயத்தில் இருந்து அகலாது
அன்பின் இறைவா எமக்கு இப்படியோர்
அன்பான அம்மாவை தந்ததிற்கு
எந்நாளும் உமக்கு நன்றி
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!