Clicky

மண்ணில் 08 MAR 1956
விண்ணில் 15 JUN 2024
அமரர் விசுவலிங்கம் பேரின்பதேவி (பேபி)
வயது 68
அமரர் விசுவலிங்கம் பேரின்பதேவி 1956 - 2024 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Visuvalingam Perinbathevy
1956 - 2024

நினைக்கவைத்து நினைக்கவைத்து நெஞ்சத்தை நினைவுகளால் கனக்கவைத்து விழி நீரால் நனைக்கவைத்துச் செல்லுமுந்தன் மோனவெளி நாடகத்தின் முடிவுரைக்கு நாம் சிந்தும் கடைவிழிப் பாமாலை பின்னிவரும் நினைவுகளைப் பின்னிறுத்த இயலாமல் எண்ணியெண்ணிப் பார்க்கின்றோம் உலர்ந்து விட்ட வார்த்தைகளை உள் நிறுத்தி வைத்துவிட்டு மனவிளக்கின் வெளிச்சத்திலே மலர்ந்து நிற்கும் உன் நினைவை பிரித்தெடுத்து மௌன இசை பாடுகின்றோம் நீந்தி வரும் நினைவுகளில் ஊற்றெழுந்த உன்னை உச்சரிக்கும் போதினிலே கண்ணிமையின் ஓரம் உப்புக் கோலம் வரைகின்றாயே செத்தனள் என்று செப்பிட முடியா அற்புதம் உந்தன் வித்தகம் அறிந்தவர்கள் நாங்கள் உத்தமி உந்தன் பிரிவால் பெரிதும் வாடுகின்றோம் அக்கா...! வேரழிந்தசோகம் என் விரல் வடித்த கண்ணீராய் வடிகிறது பார்போற்ற வாழ்ந்த மகள் இன்று பூப்படுக்கை விரித்து அயர்ச்சியில் தூங்குகின்றாள் ஓலமிடும் உறவுகளேஅழுகையை நிறுத்துங்கள் இங்கு இசைக்கப்படுவது நீழ்தூக்கத்திற்கான தாலாட்டல்ல ஆழ்நெஞ்சில் ஆர்ப்ரிக்கும் உதிரத்தை உணர்த்தும் ஊனராகம் விழிவழி சுரந்திடும் மனவலி..! இன்றைய நிசப்தத்தில் வழியும் உறவுகளின் உயிர்த்துடிப்பு...! உறவுகள்,உரிமைகள் ,உணர்வுகள் என அவளது சுற்றுப் பயணம் முற்றுப்பெறுகிறது இன்று அவளது விழிகளில் கோபம் தெரியவில்லை எதுவுமற்ற வெற்றுச்சிரிப்பு ஒன்றையும் உரைக்காது உரைத்து மௌனமொழி இயம்பி மௌனிக்கின்றது கரைத்துச் செல்லப்பட்ட வாழ்வின் சரிதத்தில் ஓய்ந்து போவது ஓசையின்றிய அவளது உயிரின் துடிப்பு மட்டுமே இறப்பினைக் கடந்து நிற்கும் காலங்கொள்ளா அறப்பொருளே ஓய்ந்ததிவள் உயிரென்றும்தேய்ந்தவுயிர் இதுவென்றும் சொல்லமனம் ஒப்பலையே மறக்கவில்லையம்மா உன்னை இமைக்குள் மூடி வைத்துள்ளோம் உயிர் நிறைந்த உடலில்லை ஆயினும் உளம் நிறைந்த நினைவுகளுடன் வாழுகின்றோம் அக்கா ! பேணிவரும் உனதுருவை தினம் மனதால் உணர்கின்றோம் பின் இறந்தாய் என்று எப்படி எம்மால் உன்னை மறக்கமுடியும்? உருவம் என்று இன்றில்லை ஆனாலும் உறுதிமிக்க எமது உள்ளத்திலே வாழுகின்றாய் பெற்றாரும் உற்றாரும் போற்றும் நிறைவுளமே என்னாளும் எம்மோடு வாழும் தெய்வமாய் உன்னை வணங்குகிறோம் உன் நினைவோடு உறவாடுகிறோம் உன் ஆத்மாசாந்தி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறோம். றகு குடும்பம் காங்கேசன்துறை.

Write Tribute