யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வைத்தியர் விசாகப்பெருமாள் பாலகுமார் அவர்கள் 02-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசாகப்பெருமாள் சரஸ்வதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், பஞ்சாட்சரம்(வைத்தியர் பலாலி- ஐயர்), சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மலைமகள் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிரவீணா, தர்சனா, காலஞ்சென்ற பிரசன்னா, யதுசன்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லதீசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
விசாக இந்திரை(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான கௌரி, வாமதேவன் மற்றும் ரவீந்திரன்(கண்ணன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், கருணாநிதி மற்றும் ரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வைஷ்ணவி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உங்கள் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.