
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனதுவோ!
அகம் நினைந்து தேடுகின்றோம்..
அன்பின் ஒளி விளக்கே!
பண்பின் சிகரமே!
பாசத்தின் உறைவிடமே!
பண்டுலகு போற்றும் பந்தமுறு வாழ்வில்
நீண்டு வந்த எம் பயணம்
ஈண்டு இலதாய் முடிவாகி
ஆண்டு ஒன்றும் ஆனதுவே!
ஆருயிரை நான் இழந்து நிற்க
ஆசை அப்பாவை சேய்கள் இழந்து தவிக்க
நேசமுறு நல்வாழ்வு நகர்த்தும்
ஆண்டு ஒன்றும் ஆனதுவோ?
ஆதரித்தாய் அறமுரைத்தாய் அன்பு தந்தாய்
ஆலயத்தின் காவலனாய் கனம் பிரியாப் பக்தனாய்
குலமகள் தன்னுடன் குலம் காக்கும்
மக்கள் மருகர் கிணந்திட
பேரர் பூட்டர் என்ற பெருவாழ்வின்
மங்காப் பேரொளியாய் வாழ்ந்த
மா மனிதர் நீங்கள் ஐயா!
மாண்டு மரித்து மறைந்தாலும்
ஆண்டு ஒன்று சென்றாலும்
ஆறாது துயர் எம் தனுக்கே!
எல்லோர் அகங்களிலும் ஆண்டு
திருவெண்காடுறைவோன்
பங்கமிலாப் பக்தனாய் நின்று
மங்காப் புகழுடன் வாழ்வீர்கள் என்றும்...
உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்
It is difficult to accept the death of one of our loved ones, but we must be aware that they will continue living in our hearts and that now more than ever we should value the happy times we lived...