Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 19 OCT 1936
மறைவு 10 JAN 2022
அமரர் வினாசித்தம்பி ஆனந்தக்கிருஷ்ணன் (அப்பு அண்ணை)
Retired officer- State Film Cooperation Ceylon
வயது 85
அமரர் வினாசித்தம்பி ஆனந்தக்கிருஷ்ணன் 1936 - 2022 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். காங்கேசன்துறை இரங்கணிய வளவு குரு வீதியைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குழாயை வதிவிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி ஆனந்தக்கிருஷ்ணன் அவர்கள் 10-01-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி தெய்வஜானகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஒப்பிலா அம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஷா(கனடா), சிவானந்தன்(Project Co-ordinotor, Giz, Jaffna) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பகீரதன்(கனடா), மயூரி(DS Office- Nallur) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அகிலயா(கனடா), அக்சரன்(கனடா), ஹரிஷ்ராம்(Jaffna Hindu College), ஹரினி(J/Uduvil Girl's College) ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம்(முன்னாள் உப அதிபர், யாழ். மகாஜனாக் கல்லூரி), Dr. சிவப்பிரகாசம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிவேதிதாதேவி, மங்கையர்க்கரசி(கொழும்பு), காலஞ்சென்ற ஞானபண்டிதன்(பிரான்ஸ்), சேகராசசேகரன்(அவுஸ்திரேலியா), ஸ்ரீவித்யாசாகரன், சேகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொட்டுப்பனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
ஆலங்குழாய்,
சண்டிலிப்பாய் வடக்கு,
யாழ்ப்பாணம்.

Live Streaming Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Photos