Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 19 JUL 1940
இறப்பு 02 APR 2026
திரு விநாசி பரமன்
ஓய்வுபெற்ற நடத்துநர் இ.போ.ச
வயது 85
திரு விநாசி பரமன் 1940 - 2026 வரணி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வரணி வடக்கை(கும்பிட்டான் புலம் பிள்ளையார்) வசிப்பிடமாகவும் கொண்ட விநாசி பரமன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

குடும்பத்தின் குல விளக்கே
நாட்கள் 31 போனாலும்
உம் நினைவுகள் எம்மை
விட்டு அகலவில்லை ஐயா!

வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் ஐயா!

உம் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு ஐயாவே!

உம் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.
குடும்பத்தினர்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியைகள் 30.04.2026 வியாழக்கிழமை அதிகாலை 03:00 அவரது இல்லத்தில் நடைபெற்று அஸ்தி கீரிமலை புனித தீர்த்தக் கரையில் கரைக்கப்படும். வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 02-05-2026 சனிக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். 

முகவரி:
கும்பிட்டான்புலவீதி,
வரணி வடக்கு,
வரணி. 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 03 Apr, 2026