
யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விமலதாசன் யம்சா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னார், காலஞ்சென்ற பவளரட்ணம், சரஸ்மேற்றின் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற யேசுதாசன், மாகிறேற் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விமலதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
வினுஜா, பிரவின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுஜீகரன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
சதீஸ்குமார்(சுவிஸ்), பிரதீபன்(லண்டன்), டிலான்(அவுஸ்திரேலியா), மேரிசின்சியா(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சகாய சுலக்சனா(சுவிஸ்), கல்ப்பனா(லண்டன்), அனோமா(அவுஸ்திரேலியா), செந்திலக்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனியும்.
கில்டா, விசயதாசன், சூரியதாசன், சந்திரமலர், மேரி அலெக்ஸ் சுலோஜனா, அலெக்சாண்டர்(ஜேர்மனி), வண்ணமலர், சோபியா, ஜெயசீலி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
பிரணீக்கா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.