
திருகோணமலை கஸ்கிஸன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வில்லவராஜா சிவலிங்கம் அவர்கள் 14-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வில்லவராஜா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சீதாதேவி அவர்களின் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் பாலாம்பிகை தம்பதிகளின்பாசமிகு மருமகனும்,
பாலமகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
இரவீந்திரன்(ரவி), விபுலேந்திரன்(பாபு), நிர்மலேந்திரன்(குட்டி), காலஞ்சென்ற குகேந்திரன்(குஞ்சு), சிவேந்திரன்(செல்வன்), குணேந்திரன்(குணா), கிருபாகரி(பிள்ளை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரம்யா, விஜிதினி, கோமளகெளரி, உதயகுமாரி, கிஷாந்தினி, சக்திசரவணபவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சோதிலிங்கம், தியாகலிங்கம் மற்றும் இராஜராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தர், மனோன்மணி மற்றும் ஸ்ரீஸ்கந்தா, பாலகணேசன், நடேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிர்மலாதேவி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், பத்மாவதி, காலஞ்சென்ற மண்டலேஸ்வரன், செல்வராணி, கெளரி, நளாயினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோஜ், அகல்யா, ஆரரன், மாதுமை, ராம், பிரணவன், சிந்துகி, ஷாருகி ஆகியோரின் அன்புப் பேரனும்,
மகிமை அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My deepest sympathies ? May his soul rest in peace ??