9ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் விஜிதா விக்னேஸ்வரன்
(சித்திரா)
வயது 34
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜிதா விக்னேஸ்வரன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேற்றுவரை எம்மோடு இருந்த நீர் இன்று
காற்றோடு கலந்து கனவாகிப்போய் ஆண்டு ஒன்பது
வந்தும் ஆறமுடியவில்லை!..
உங்கள் பிரிவால் இன்றும் நாம்
ஒவ்வொரு கணமும் துடிக்கின்றோம்!
உம்மைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை,
உம் அன்பிற்கு இணை யாருமில்லை
உம் பாசத்திற்கு ஏங்கும் எங்கள் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் எங்களை கொல்கிறது.
உன்னழகு வதனம் காணாத
எம்மனம் நாளுமேங்கி நில விழந்த
வானமென இருண்டு கிடக்குதம்மா!
விழிகள் சொரிகிறது
நிரப்ப முடியா வெற்றிடத்தை உருவாக்கி
எம்மை நிலைதடுமாற வைத்து
எங்கு சென்றாய்?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்