யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜிதா விக்னேஸ்வரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு அம்மா!
நாங்கள் உங்களை இழந்து
ஏழு ஆண்டுகள் உருண்டுவிட்டன
நேற்று போல் அது நெஞ்சில் வலிக்கின்றது
இது தீராத நோய் மாறாத துன்பம்
அம்மா நீ விலகிய பிறகு
மூச்சுத் திணறியது சுவாசம் சுழித்தது
வாழ்வது கேள்விக்குறியாய் எழுந்தது
அம்மாவை இழந்ததற்குப் பின்பு இனி வாழ்க்கையில்
இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்று தோன்றியது
நீ இல்லை என்ற நினைவை விட
இருக்கின்றாய் என்ற கனவு நன்றாய் இருக்கின்றது
அம்மா நீ மேலுக்கும் மேலானவள் உன் இழப்பு
பல வழிகளிலும் தாங்க முடியாதது
அது என்னைப் பலவீனப்படுத்தியது
இந்தப் பலவீனத்தை நீ பலமாக்கியிருக்கிறாய்
நீ எங்களோடு இரு எங்களுக்கு நல்வழி காட்டு
நீ எங்களிடம் வர வேண்டும்
உன்னை மறவாமையே ...
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...