கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயரட்ணம் ஜனார்த்தனன் அவர்களின் 90ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி கிரியையும்.
நாட்கள் கடந்தாலும்
இருதயமே உன்நினைவில்
இருண்டயுகத்தில் நாமையா!
நிழல்போல் இருந்தவன் நீ!
நினைவாய் மாறினாய்
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர்த் துளியானாய்!
எம் இதயங்களெல்லாம் நொருங்க
இமைகளெல்லாம் நனைய
எங்களைத் தவிக்கவிட்டு
நெடுந்தூரம் சென்றதேனோ?
கண்மணியே காலனவன் ஆட்கொண்டு
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
அழியாது உம் நினைவு...
உங்கள் ஆன்மா சாந்தி பெற
கடவுளை வேண்டி நிற்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 11-12-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணி தொடக்கம் ந.ப 12:00 மணி வரை இல.19, Walmer Rd, Portsmouth, PO1 5AS, UK எனும் முகவரியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
14-09-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்த விஜயரட்ணம் ஜனார்த்தனன் கஜன் மரணச்செய்தி அறிந்து இறுதிக்கிரிகை நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள், பதாதைகள் வெளியிட்டோருக்கும், தொலைபேசி மூலம் எம்மை தேற்றிய உற்றார் உறவினர்கள் நண்பர்களுக்கும் மற்றும் பல வழிகளில் உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கி எம்முடன் துயர் பகிர்ந்து கொண்ட அனைவர்க்கும் எமது இதயம் கனிந்தநன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
I will never forget his kindness. May God give him eternal rest and the family the strength to bear the great pain