Clicky

Born 05 JUL 1943
Rest 28 AUG 2023
Late Vijayaluxmy Satkunananthan 1943 - 2023 Vannarpannai, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute
பிராத்திக்கின்றோம்
Tribute to My Mami ❤️❤️ தங்கா மாமி! தங்கா மாமி! பெயருக்கேற்ற தங்கமான என்னுடைய மாமி ! தங்கமான குணம்! தங்கமான மனம்! தங்கமான பண்பு! தங்கமான அன்பு! இது எல்லாவற்றின் மொத்த உருவம் அவர்! ‘Vijayalaxmy’ இந்தப் பெயரின் அர்த்தம் ஆங்கிலத்தில் ‘The Goddess of Victory ‘ என்று வரும் ! ‘வெற்றிகளுக்கான பெண் தெய்வம்’ என்று அர்த்தம். பெயருக்கேற்ப தன்னைச் சுற்றி இருந்த எல்லோருக்கும் வெற்றியையே வழங்கியவர். குடும்பத்தின் வெற்றியில் முழுப்பங்கு! உற்றார் உறவினர் நண்பர்களின் வெற்றியில் பெரும் பங்கு.! இந்த நாட்டில் காலடி எடுத்து வைத்த நாள் முதல் எனது வெற்றியில் பெரும் பாகமாக இருந்தவர் என் மாமி. என்னை தன் வீட்டில் தத்தெடுத்து அரவணைத்து , தனது சின்னண்ணாவின் மகனான எனக்கு சிறிதேனும் வீட்டைப் பிரிந்த வலி தெரியாமல் பார்த்துக் கொண்டவர்! வந்த நாட்களில் 16 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான வேலை .ஒரு பவுணும் பெரு மதிப்பு! ஒவ்வொரு நாளும் Sandwich இரவிலேயே ஆக்கி மறுநாளுக்கு ready ஆய் fridge இல் இருக்கும். எனது அப்பாவின் மறைவின் பின் இந்நாட்டில் காலூன்றி நிற்கும் வரை பெரும் பக்க பலமாய் நின்ற என் மாமிக்கு , ஓரளவேனும் பெருமை சேர்த்திருக்கிறேன் என்பதில் எனக்கும் பெருமை தான்! மற்றவர்களின் வெற்றிக்காய், தன்னையே உருக்கி பிறருக்கு வெளிச்சம் தரும் ‘மெழுகுவர்த்தி’ போல் தனது வாழ்நாள் முழுவதும் உழைத்து வாழும் தெய்வமாக இருந்து தெய்வமாகவே அமரரான எனது ஆருயிர் மாமி ! எங்கு கண்டதும் ‘குமரன் நீர்…..’ என்று கேட்கும் உங்கள் குரலை இனிக்கேட்க முடியாதே மாமி ….. இனிக்கேட்க முடியாதே மாமி ….. இறந்தவர்கள் உடலை பல கோடி வருடங்கள் பாது காத்த மம்மியை உலக அதிசயமாய் பார்க்கிறோம் மாமாவின் மம்மியாக சொர்க்கத்தில் நீங்கள் கை கோர்த்திருப்பது ஒரு அதிசயமல்ல அது நிச்சயம்! எமக்கெல்லாம் வலியைத்தந்து விட்டு நீங்கள் வலியில்லாத தெய்வ மரணத்தை தழுவி விட்டீர்களே மாமி! காலன் கண் வைக்க முன் இரண்டு வாரங்களில் இனிதே களித்த விடுமுறைப் பொழுதுகளை விழிகளில் சுமந்து உங்களை கனத்த இதயத்துடன் வழி அனுப்பி வைக்கிறோம்….... Salute to our ‘pillar of Thuraiappah family’ ! Salute to our சிங்கப்பெண்! Salute to our தலை !
Write Tribute