Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 05 JUL 1943
இறப்பு 28 AUG 2023
அமரர் விஜயலட்சுமி சற்குணானந்தன் (தங்கா)
வயது 80
அமரர் விஜயலட்சுமி சற்குணானந்தன் 1943 - 2023 வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், யாழ். கந்தர்மடம், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி சற்குணானந்தன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எங்கள் அன்புத் தெய்வமும் எங்கள் குடும்ப தலைவியுமாய் இருந்து எங்களை நல்வழிப்படுத்திய திருமதி. விஜயலட்சுமி சற்குணானந்தன் அவர்கள் உயிருடன் இருந்த வேளை உள்ளத்தால் நேசித்தவர்களுக்கும், அவர் உயிர் பிரிந்த வேளை தங்கள் அன்பையும், இரங்கலையும் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், தேவையான போதெல்லாம் உதவி ஒத்தாசைகள் புரிந்து அவரை உளமார நேசித்தவர்களுக்கும், அவரது இறுதி கிரியைகளை செவ்வனே செய்து அவரது இறுதிப் பயணத்தை சிறப்புற நடைபெற ஒவ்வொரு வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் வீட்டுக்கிருத்திய கிரியைகள் எதிர்வரும் 27-09-2023 புதன்கிழமை அன்று முற்பகல் அன்னாரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும்(12.30PM) கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 33 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.