Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 28 JUL 1957
இறப்பு 17 APR 2024
திருமதி நடேஷப்பிள்ளை விஜயலட்சுமி (பாமா)
வயது 66
திருமதி நடேஷப்பிள்ளை விஜயலட்சுமி 1957 - 2024 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் நடுவுத்துருத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நடேஷப்பிள்ளை விஜயலட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நாட்கள் 31 ஆகியும்
எங்கள் இதயங்களில் என்றும்
 நீங்காமல் குடியிருக்கும் அன்னையே!

நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை
உங்கள் நினைவுகள்
எத்தனை நாட்கள் சென்றாலும்
எம் இதயத்தில் இருந்து அகலாது

இனிய தாயாக இல்லறத்தில்
வாழ்ந்தீர்கள் அம்மா!
ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா!

நாட்கள் 31 சென்றாலும்
ஆறவில்லை மனது
நாட்கள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 15-05-2024 புதன்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் இல. 40, கோவில் வீதி, முகத்துவாரம் அந்தியேட்டி மடத்திலும், வீட்டுக் கிருத்தியம் 17-05-2024 வெள்ளிக்கிழமை மு.ப எமது இல்லத்தில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து ந.ப 12.00 மணியளவில் இல. 291, செட்டியார் தெரு, கொழும்பு-13ல் அமைந்துள்ள கல்யாண முருகன் மஹால் மண்டபத்தில் நடைபெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், மதிய போசனத்திலும் கலந்துகொண்டு அன்னாரின் சாந்தியடையப் பிரார்த்திக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
இல.247/87,
ஆட்டுப்பட்டித் தெரு.
கொழும்பு-13. 

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கிருபாமூர்த்தி வதனி - சகோதரி
சயந்தன் - மகன்
சதீஸ்கரன் - மகன்
கவிந்தன் - மகன்
கேஷிகா - மகள்
கனகாம்பிகை(தேவி) - சகோதரி
வடிவாம்பிகை - சகோதரி
அருந்தவராசா(ராசன்) - சகோதரன்
கபிலா - மகள்
தினேஸ் - மகன்
தீபா கண்ணன் - மகள்
கிட்னராசா தர்சினி - மகள்
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.