
திதி:07/04/2025
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Kingsbury ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயலட்சுமி ஜெகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்கள் மட்டும் உன்னுருவை
காண்பதற்கு துடிக்கிறது!
காதுகளும் உங்கள் குரலை
கேட்டிடவே விரிகிறது!
சிந்தையிலே உங்கள் நினைவு
சிறகடித்து பறக்கிறது!
எண்ணங்களில் உங்கள் நினைவு
இறுக்கமாக அணைக்கிறது சகோதரி !
அன்பு பாசம் நேசம் பொழிந்து
எங்களை கட்டி அணைத்தாயே!
வாழ வழிகாட்டி வையமெலாம்
புகழ வைத்த தெய்வமே!
பாரில் தவிக்கின்றோம்
பாசத்திற்கு ஏங்குகின்றோம்
சகோதரி என்றழைக்க உள்ளம் துடிக்குதம்மா!
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து..
இன்றுடன் ஓராண்டு முடிந்தாலும்!
எமது குடும்பக்கோவிலின் குலவிளக்காய்!
எங்கள் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாய்!
உற்றவர்க்கும், மற்றவர்க்கும் உறுதுணையாய்!
எம் வாழ்வின் ஒளியாய் மகிழ்வாய்
மகிமையாய் நீங்கள் வாழ்ந்தாய் மாமி!
அன்புக்கும், பண்புக்கும் பொக்கிஷமாய்!
அன்பு நெஞ்சங்களில் அகலா இடம்பிடித்து!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து!
எம்மையும் வாழவைத்து!
வானுறையும் எமது தெய்வத்தின்
இனிய நினைவுகளை எங்களின்
உதிரங்களில் சுமந்த வண்ணம்
இம் மலரை உங்கள் பாதக்கமலங்களில்
அர்ப்பணிக்கின்றோம் மாமி!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!