Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 18 JAN 1994
விண்ணில் 14 JUN 2022
அமரர் விஜயாலயன் மதியழகன்
Member of Ottawa Police Services, Former Member of Canadian Armed Forces
வயது 28
அமரர் விஜயாலயன் மதியழகன் 1994 - 2022 முள்ளியவளை, Sri Lanka Sri Lanka
Tribute 51 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கனடா ஒட்டாவா நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயாலயன் மதியழகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:04/06/2023.

முதலாம் ஆண்டு நினைவலை!

ஓராண்டு ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
 தீராத ஏக்கத்துடன் இன்னமும் துடிக்கின்றது
 எங்கள் இதயம் உன் இனிய புன்னகையை
 மீண்டும் ஒருமுறை காண்போமா...

வாழ்க்கை என்ற வசந்த காலம்
 வரும்போதே- உன்னை வாரி
அணைத்துக் கொண்டானே
 அந்த இறைவன் வலி தாங்க முடியாமல்
 நாங்கள் வாழ்நாள் முழுவதும்
துடித்து நிற்கின்றோம்!

ஒரு நாளும் மாறாது - எம் சொந்தம்
 எங்கள் உயிரோடு உயிர் சேர்ந்தது உன் - பந்தம்
ஆண்டு ஒன்று சென்றாலும் - எம் மனங்களில்
 நிறைந்திருக்கிறாய்

இறப்பது வாழ்வில் இயற்கையின் நியதி
 இளவயதில் நீ பிரிந்ததுதான் - எங்கள்
 இதயத்தை வாட்டுது
காலங்கள் கடந்து போனாலும்
இன்னும் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
 இன்றும் நீ எம்மோடு
 வாழ்ந்து கொண்டே இருக்கின்றாய் என்றும்
நீங்காத சோகம் எம் நெஞ்சங்களோடு
 ஈரவிழிகளுடன் 
உம் ஆத்மா
 சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்