முல்லை மகாவித்தியாலய மாணவியாய் நான் கண்டேன் தொல்லை இல்லாச் சிரிப்பின் குதூகலத்தின் சுட்டிப்பெண் எல்லையில்லா விளையாட்டின் எழில் நங்கை என்றுமு; கல்லையும் கனியவைக்கம் இன்சொல் வதனத்தாள்! லதா ஸ்ரூடியோ சண்முகத்தின் வாரிசுகளில் ஒன்று கலகலப்பாய் கதைபேசிச் சிரித்திருக்கம் கலையழகி கலைக்காக கலைமகளாய் தன்மகைளை அரங்கேற்றி கலையழைக இரசித்தவளே ஏன்விரைந்தாய் விஜயலட்சுமியே1 கணவனாய் விஜயரட்ணத்தை வரைத்து அன்புறவால் மணவாழ்வின் விளைவாக றபெஷினி. பிறிந்தியா இணையாக வளர்த்தெடுத்த வளங்காட்டி வாழவைத்தாய் இணைபிரிந்த விரைந்திடவும் விதியாச்சோ! அன்பும் பண்பும் நிறைந்தவளாய் உதவிக்கரம் இன்புடனே நீட்டும் உன்வாழ்வை நீக்கித்தான் தன்னுடலை விடுத்து உயிர்நீங்க உறவுகளோ தன்நிலை மறந்து துயருறவே சென்றதேனோ! இறப்பும் பிறப்பும் இயற்கையின் நியதிதான் துறப்பும் துயுரும் நீக்கிட யாரளுர் இங்கு அறத்தொடு வாழ்ந்த வாழ்வு இறையருள் பொறையென சாந்திதான் அடைக மகளே! உறவுகளின் துயரில் பங்கு கொள்ளும் தயாதேவி சிவபாலு குடும்பத்தினர்