Clicky

பிறப்பு 23 AUG 1939
இறப்பு 11 SEP 2019
அமரர் விஜயலட்சுமி ஆறுமுகசாமி
சங்கீத பூஷணம், பழைய மாணவி யூனியன் கல்லூரி தெல்லிப்பழை, ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியை யூனியன் கல்லூரி ஸ்தாபகர் மதுரகான சபா- பிரித்தானியா
வயது 80
அமரர் விஜயலட்சுமி ஆறுமுகசாமி 1939 - 2019 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 20 SEP 2019 United Kingdom

சங்கீத மழை ஓய்ந்துவிட்டது. சங்கீத இசைவானில் சிறகடித்து பறந்த பறவை ஒன்று ஒய்வு பெற்றுவிட்டது. பல மாணவ மணிகளின் சஙகீத தாகத்தை தீர்த்து வைத்த நீரூற்று தன் கடமையை முடித்துக்கொண்டது. அவர்களின் மனதில் சங்கீத ஒளி பாய்ச்சி அவர்களை அரங்கேற்றம் காணவைத்த ஓய்வறியா சூரியன் ஓய்வு பெற்றுவிட்டது. சங்கீதம் மட்டுமல்லாது வயலின் இசையிலும் பட்டொளி வீசி பறந்த கொடி சாய்ந்துவிட்டது. வாண்ஸ்வேர்த் தமிழர் நலன்புரிச்சங்க தமிழ் பாடசாலை பாடல் உட்பட பல பாடல்களுக்கு இசையமைத்தது, இவர் இயக்கத்தில் நான் எனது மனைவி உட்பட பலர் பங்குபற்றிய வில்லுப்பாட்டு, நாடகங்கள் பலரது பாராட்டுகளை அள்ளி குவித்ததுடன் இவரை ஒரு சகலாகலாவல்லியாக உலகுக்கு காட்டியது. என்ன செய்வது? விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்ன செய்ய முடியும்? சங்கீதபூஷணம் திருமதி விஜயலக்ஷ்மி ஆறுமுகசாமி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.