Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 JUN 1947
இறப்பு 28 SEP 2025
அமரர் விக்கினேஸ்வரன் ஆனந்தர் (விக்கி)
Retired TEVA Canada pharmaceutical
வயது 78
அமரர் விக்கினேஸ்வரன் ஆனந்தர் 1947 - 2025 சங்கானை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆனந்தர் விக்கினேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆருயிர் அப்பாவுக்கு
எங்கள் அன்பான கண்ணீர் பூக்கள்!

ஓராண்டு காலம் சென்றிருந்தால் என்ன
ஐயா உங்களின் பார்வையும் தோற்றமும்
செயல்களும் கண்முன்னே கற்றாடுதய்யா!

எம்மவர் விழிகளில் நீர் ஓடிக் கொண்டே
நினைவலைகளால் எம் உள்ளம் வாடுதே ஐயா!

பாசத்தின் கருவியாய் பண்பின் சிகரமாய்
அன்பின் திருவுருவாய் எதை நீர் செய்தாலும்
கண் போல எமை எல்லாம் காத்து யாவருக்கும்
ஆசை மொழி கூறி அரவணைத்து
பேணிக் காத்த எம் தெய்வமே!

அலை அலையாய் வரும்
கடல் கூட வெயிலில் வற்றி விடும்.
என் கண்ணில் கண்ணீர் வற்றவில்லையே...
நித்தமும் உங்கள் நினைவு
என்னை பித்தம் கலக்க வைக்கிறது...

ஆயிரம் ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள்
மனதில் என்றென்றும் நிறைந்திருக்கும்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 29 Sep, 2025