யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Argenteuil ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விக்டர் விமலதாசன் ஆரோக்கியநாதர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று போனாலும்!
அழியாது நம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!
எம்மை ஆறாத் துயரத்தில் விட்டு போனதேனோ!
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது...
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!
இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா என
ஏங்கித் தவிக்கிறோம் அப்பா...
ஓயாது உங்கள் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
துடிதுடிக்க உயிரோடு வாழ்கின்றோம்
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்.
Periappa, we still miss you. Thank you for all the love you showed us. We hope that your soul rests in peace in Heaven. ??